ரூ.13,500 கோடி மதிப்பில் Su-30MKI ஜெட் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம்
இந்திய விமான படைக்கு ரூ.13,500 கோடி மதிப்பில் Su-30MKI ஜெட் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய அரசு ஒப்பந்தம்
இந்திய விமான படைக்கு ரூ.13,500 கோடி மதிப்பில் 12 உள்நாட்டு Su-30MKI ஜெட் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் நேற்று (டிசம்பர் 12) இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "இந்திய அரசின் தன்னிறைவு பாரதம் முன்னெடுப்பின் பகுதியாக ரூ.13,500 கோடி மதிப்பில் 12 உள்நாட்டு Su-30MKI ஜெட் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய Su-30MKIகள், 62.6% உள்நாட்டு உபகரணங்கள் கொண்டவை. இவை, HAL நிறுவனத்தின் நாசிக் பிரிவில் இந்திய பாதுகாப்புத் துறை பங்குதாரர்களால் வழங்கப்படும் முக்கிய கூறுகளுடன் தயாரிக்கப்படும்.
இந்த ஜெட் விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய விமான படையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும். இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலையை பலப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |