நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் வெற்றி: முதல் அணியாக இந்தியா படைத்த சாதனை
நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு முதல் அணியாக டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.
இந்தியா அபார வெற்றி
இந்தியா- நியூசிலாந்து அணிக்கு இடையிலான 3 வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அதிரடியாக 155 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0(5) கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
முதல் கிரிக்கெட் அணி இந்தியா
154 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி 60 பந்துகளில் எட்டிப் பிடித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் முழு உறுப்பினர் நாடுகள் இடையே நடைபெற்ற போட்டியில் 150 ஓட்டங்களுக்கு அதிகமான இலக்கை 60 பந்துகள் மீதம் வைத்து ஜெயித்த முதல் அணி இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.
தொடர் வெற்றிகள்
நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியை தொடர்ந்து, இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற 9வது தொடர் இதுவாகும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஆசிய கோப்பை ஆகிய இரண்டையும் சேர்த்தால் இந்தியாவுக்கு இது 11வது தொடர் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |