22 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை அணி சாதனையை முறியடித்த இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
சாதனைப் படைத்த இந்திய அணி
நேற்று 4-வது நாள் ஆட்டத்தின்போது துடுப்பாட்டம் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆல் அவுட்டானார்கள்.
இதனையடுத்து, இந்தியா தனது 2-வது துடுப்பாட்டத்தை தொடங்கியது. களத்தில் இறங்கிய ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் பந்துகளை அடித்து பறக்கவிட்டு அதிரடியாக விளையாடினார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 24 ஓவரில் 181 ஓட்டங்களை எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி 12.2 ஓவர்களில் அதிவேகமாக 100 ஓட்டங்களை கடந்து சாதனைப் படைத்தது.
2001-ம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்காளதேச அணிக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி 13.2 ஓவரில் 100 ஓட்டங்கள் எடுத்து சாதனைப் படைத்தது. இதன் பின்பு, சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.
தற்போது இது தொடர்பாக தகவல் சமூகவைலத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |