ஒரே நாளில் 6,148 பேர் பலி! இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா மரணம்: வெளியான காரணம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 6,148 பேர் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கிலிருந்து பதிவான அதிகபட்ச தினசரி இறப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஜூன் 9ம் திகதி 2219 மரணங்கள் பதிவான நிலையில் ஜூன் 10ம் திகதி ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 6,148 ஆக பதிவானது அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த திடீர் உயர்வுக்கு பீகார் மாநிலம் தான் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இதுவரை பீகாரில் கணக்கிடப்படாத கொரோனா மரணங்கள், மொத்தமாக (3951) நேற்று பதிவுசெய்யப்பட்டதால் பலி எண்ணிக்கை உச்சத்தை தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் பதிவு செய்த மரண எண்ணிக்கையை கணக்கிடாமல் பார்த்தால் ஜூன் 10ம் திகதி இந்தியாவில் 2197 மரணங்கள் பதிவாகியுள்ளது.
அதேசமயம், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிததாக 94,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.