இந்தியாவின் புதிய தாரசக்தி மின்னணு போர் அமைப்பு., அதிர்ச்சியில் சீனா, பாகிஸ்தான்
சீனாவும் பாகிஸ்தானும் அதிர்ச்சியடையும் வகையில், இந்தியாவின் புதிய தாரசக்தி (Dharashakthi) மின்னணு போர் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, தாரசக்தி எனப்படும் ஒருங்கிணைந்த மின்னணு போர் அமைப்பு (Dharashakti Integrated Electronic Warfare System) தற்போது இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.5,150 கோடி மதிப்பில் பாதுகாப்பு வாங்கும் குழுவால் ஒப்புதல் பெற்ற இந்த அமைப்பு, எதிரிகளின் ரேடார் மற்றும் மின்னணு தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று, Electro-Optical (EO) தொழில்நுட்பம். இது உயர் தெளிவுடைய காட்சி மற்றும் உள்நோக்கி சென்சார்கள் மூலம் குறி கண்டறிதல், போர்க்கள கண்காணிப்பு மற்றும் நேரடி அச்சுறுத்தல் மதிப்பீடு போன்றவற்றை கடுமையான வானிலை மற்றும் சூழ்நிலைகளிலும் மேற்கொள்ளும் திறன் கொண்டது.
இதன் மூலம் இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு திறன்கள் புதிய நிலைக்கு உயர்த்தப்படுகின்றன.
தாரசக்தி அமைப்பு, தொடர்பு மற்றும் தோசார்பில்லாத மின்னணு போர் ((COM & Non-COM EW) ஆகிய இரண்டிலும் செயல்படுத்தகூடியது.
இது எதிரியின் தகவல் தொடர்புகளை முடக்குவதுடன், இந்திய இராணுவத்தின் நீண்ட தூர தகவல் பரிமாற்றத்தையும் பாதுகாக்கிறது. பல எதிரி இலக்குகளை ஒரே நேரத்தில் கையாளும் திறனும் இதில் உள்ளது.
இந்த முன்னேற்றம், சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பாதுகாப்பு ரீதியாக பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
இந்தியாவின் தன்னிறைவு பாதுகாப்பு முயற்சியில் இது ஒரு முக்கிய கட்டமாகும். Make In India திட்டத்தின் கீழ், தாரசக்தி அமைப்பு இந்தியாவின் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Dharashakti Electronic Warfare, India EW system 2025, Indian Army radar jamming, Defence Acquisition Council India, COM and Non-COM warfare India, Electro-optical sensors India, India vs China defence tech, Pakistan radar disruption, Make in India defence, 5150 crore defence project