5 பாகிஸ்தான் F-16 விமானங்கள் அழிக்கப்பட்டது: இந்திய விமானப்படை தலைவர் உறுதி
ஆபரேஷன் சிந்தூரில் 5 பாகிஸ்தான் F-16 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தலைவர் கூறியுள்ளார்.
93வது விமானப்படை தினவிழாவில் பேசிய இந்திய விமானப்படை தலைவர் AP சிங் (AP Singh), ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியா பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களை தாக்கி, 4 முதல் 5 F-16 வகை போர் விமானங்களை அழித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மே மாதத்தில் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானின் ரேடார் மையங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஓடுதளங்கள் மற்றும் விமான ஹேங்கர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் C-130 வகை விமானம், AEW&C வகை கண்காணிப்பு விமானம் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட JF-17 வகை விமானம் உள்ளிட்ட பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
மேலும், ஒரு நீண்ட தூர தாக்குதலில், 300 கி.மீ. தூரத்தில் AEW&C அல்லது SIGINT வகை விமானத்தை அழித்ததாகவும், இது இந்திய விமானப்படையின் "Longest Kill" எனக் கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இந்திய விமானங்களை வீழ்த்தியதாக கூறும் தகவல்கள் 'மனோஹர் கஹானியன் கதைகள்" என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய விமானப்படை, பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், பாகிஸ்தான் முடிவில் இந்தியாவிடம் சமாதானம் கோர வேண்டிய நிலைக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Operation Sindoor India, India Pakistan Airstrike, Indian Air Force, Amar Preet Singh, AP Singh