அசுத்தமான இந்திய நகரங்களின் பட்டியல் - முதலிடத்தில் தமிழக நகரம்
அசுத்தமான இந்திய நகரங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் 2 தமிழக நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
அசுத்தமான இந்திய நகரங்கள்
இந்தியாவின் நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கையான ஸ்வச் சர்வேக்ஷன் 2025(Survekshan 2025) வெளியாகியுள்ளளது.
சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை மற்றும் குடிமக்களின் ஈடுபாடு போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் நகரங்கள் மற்றும் கிராமங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அசுத்தமான நகரங்களின் பட்டியலில், 4823 புள்ளிகளுடன் தமிழ்நாட்டில் உள்ள மதுரை முதலிடத்தில் உள்ளது.
5272 புள்ளிகளுடன் பஞ்சாப்பில் உள்ள லூதியானா 2வது இடத்திலும், 6822 புள்ளிகளுடன் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 3வது இடத்திலும் உள்ளது.
ராஞ்சி 4வது இடத்திலும், பெங்களூரு 5வது இடத்திலும், மும்பை 8வது இடத்திலும், டெல்லி 10வது இடத்திலும் உள்ளது.

தூய்மையான நகரங்களின் பட்டியலில், இந்தோர் முதலிடத்தில் உள்ளது.
பெங்களூரு, சென்னை, டெல்லி ஆகியவை பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நகரங்களாக இருந்தபோதிலும், விரைவான நகரமயமாக்கல், கழிவுப் பிரிப்பில் பின்னடைவு மற்றும் மோசமான பொது ஒழுக்கம் போன்ற காரணங்களால் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளன.
சென்னை மற்றும் டெல்லி மோசமான கழிவுப் பிரிப்பு , அடிக்கடி தண்ணீர் தேங்குதல் மற்றும் திறமையற்ற சுகாதார அமைப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |