சவுதி அரேபியாவிலிருந்து பணம் அனுப்புவதில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!
சவுதி அரேபியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பின் வெளிநாட்டவர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
இது உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில், சவூதியில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு 38.4 பில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்.
அரபு நாடுகளில், வெளிநாட்டவர் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பும் பட்டியியலில் சவுதி அரேபியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இப்பட்டியலில், 38.5 பில்லியன் டொலர்களுடன் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடத்தில் உள்ளது.
உலகளவில், அமெரிக்காவில் இருந்து தான் வெளிநாட்டினர் அதிக பணத்தை சொந்த ஊருக்கு அனுப்புகின்றனர்.
அதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து தான் அதிக பணத்தை நாட்டிற்கு அனுப்புகின்றனர்.
அதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும், மூன்றாவதாக சவுதி அரேபியாவில் இருந்தும் இந்தியர்கள் அதிகமாக பணம் அனுப்புகின்றனர்.
2023-ல் இந்தியர்கள் 120 பில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். அதில் 18 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்தும், 11 சதேவீதம் சவூதி அரேபியா, குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இருந்தும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |