துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும்
மே மாத தொடக்கத்தில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் போன்ற சூழ்நிலை உருவான நிலையில், துருக்கி பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தது.
உறவுகள் மோசமடைந்தால்
நெருக்கடியான கட்டத்தில் இந்தியாவை எவரும் வெளிப்படையாக ஆதரிக்காதபோது பாகிஸ்தானை துருக்கி வெளிப்படையாக ஆதரித்தது. இந்த சூழ்நிலை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தால், என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஆச்சரியப்படும் விதமாக, இந்தியர்களின் சமையலறையிலும் வீட்டிலும் உள்ள பல அன்றாடப் பொருட்களின் விலையை அது பதம் பார்க்கும் என்றே கூறப்படுகிறது.
துருக்கியிலிருந்து பல பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது, குறிப்பாக உலர் பழங்கள், பாதாம், வால்நட்ஸ் மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களுக்காக இந்தியா துருக்கியையே நம்பியுள்ளது.
இரு நாடுகளின் உறவுகள் மோசமடைந்தால், விநியோகம் குறைவதால் இந்தப் பொருட்களின் விலை பெருமளவு உயரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கவலைக்குரிய ஒரு முக்கிய விடயம் ஆப்பிள்கள்.
வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் துருக்கியிலிருந்து சுமார் 1,29,882 மெட்ரிக் டன் ஆப்பிள்களை இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தகத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் இந்திய சந்தைகளில் ஆப்பிள்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்.
ஆலிவ் எண்ணெய் மற்றொன்று. ஏற்கனவே விலை உயர்ந்தது, மேலும் துருக்கியுடனான உறவுகளில் முறிவு ஏற்படுவது அதன் விலையை இன்னும் அதிகரிக்கக்கூடும், ஏனெனில் இந்தியா அங்கிருந்து கணிசமான அளவு இறக்குமதி செய்கிறது.
இந்திய நகரங்களில்
செர்ரி பழங்கள் அல்லது மூலிகை தேநீர் உள்ளிட்டவையும் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. சமீபத்திய ஆண்டுகளில், குனாஃபா மற்றும் துருக்கிய கபாப் போன்ற துருக்கிய உணவுகள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற முதன்மையான இந்திய நகரங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டன.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டங்கள் அதிகரித்தால், துருக்கிய உணவுப் பொருட்களின் இறக்குமதி அல்லது தயாரிக்கத் தயாராக உள்ள உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படலாம், இதனால் அவற்றின் கிடைக்கும் தன்மை மற்றும் விலை பாதிக்கப்படும்.
உணவுப் பொருட்களுக்களைத் தவிர்த்து, துருக்கிய தேநீர், கம்பளங்கள், தளபாடங்கள், கையால் செய்யப்பட்ட அலங்காரங்கள், கைத்தறி, பட்டு மற்றும் பளிங்கு ஆகியவற்றையும் இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்த ஆடம்பர மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் இந்திய சந்தைகளில் விலை அதிகமாகவோ அல்லது கிடைக்க கடினமாகவோ மாறக்கூடும்.
இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைவது இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் பல பொருட்களை, குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை நேரடியாகப் பாதிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |