சீன எல்லையில் ரயில் பாதையை விரிவுபடுத்தும் இந்தியா
இந்தியா, சீனாவின் எல்லையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு வணிக மற்றும் மக்கள் நலனுக்கான இணைப்பையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தில் மொத்தம் 500 கிலோமீட்டர் (310 மைல்) நீளமான ரயில் பாதைகள், பல பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் கொண்டதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், சீனா, வங்காள தேசம், மியான்மர் மற்றும் பூட்டான் எல்லைகளுக்கு அருகிலுள்ள தலைதூர பகுதிகள் தேசிய ரயில்வே வலையமைப்புடன் இணைக்கப்படுகின்றன.
இத்திட்டம் ரகசியமாக செயல்படுத்தப்படுவதால், அதிகாரிகள் தங்கள் பெயரை குறிப்பிடாமல் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இத்திட்டதிற்கான மொத்த செலவு ரூ.30 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 4 ஆண்டுகளில் திட்டம் நிறைவு செய்யபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதோடு, நீண்டகால வளர்ச்சி திட்டமாகவும் அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India China border railway expansion, India rail infrastructure northeast frontier, India railways China border, India Bhutan Myanmar Bangladesh rail links, India China relations infrastructure