ரஷ்யாவிடம் மேலும் 5 S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் இந்தியா
இந்தியா தனது வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து மேலும் 5 S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப்படை சுதர்ஷன் என அழைக்கப்படும் S-400 அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தான் விமானங்களை வெற்றிகரமாக வீழ்த்தியது.
இதன்மூலம், 300 கிலோமீற்றர் தூரத்தில் பாகிஸ்தான் உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய சாதனையும் படைத்தது.
இந்த வெற்றியின் பின்னணியில், இந்திய விமனப்படை கூடுதளாக S-400 அமைப்புகளை வாங்கும் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளது.
இவை இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் நிலைநிறுத்தப்படவுள்ளன.

பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் HQ-9 ஏவுகணை அமைப்புகள் பயனற்றதாக நிரூபிக்கப்பட்டன.
இந்தியா 2018-ல் ரஷ்யாவுடன் 5 S-400 பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. அதில் 3 ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 2 அமைப்புகளை விரைவில் வழங்குமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் மேலும் 5 S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவின் DRDO நிறுவனம் Project Kusha எனும் நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |