உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் இந்தியாவின் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு: விரிவான பின்னணி

Food Shortages Narendra Modi Money
By Arbin Aug 31, 2023 10:26 PM GMT
Report

இந்தியாவில் அதிகரித்துவரும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு உலகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகஸ்டு மாதத்தில் 11 சதவீதம் அதிகரிப்பு

மோசமான கால நிலை, பொய்த்துப்போன பருவ மழை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் உணவுப் பண்டங்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் இந்தியாவின் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு: விரிவான பின்னணி | India Exporting Food Inflation To The World @getty

உச்சத்தில் இருந்த தக்காளி விலை, மெல்ல சரிவடைந்துவர, உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை ஜூன் மாதத்தில் இருந்து நான்கில் ஒரு பங்கு விலை உயர்ந்துள்ளது.

பருப்பு வகைகளின் விலை ஆண்டு துவக்கத்தில் இருந்ததை விட தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, வழக்கமான சைவ உணவின் விலை ஜூலை மாதத்தில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், முக்கிய மாகாணங்களில் தேர்தல் நெருங்க, பொதுத் தேர்தலும் அடுத்த ஆண்டு மே மாதத்தில் முன்னெடுக்கபடவிருக்கும் சூழலில் இந்திய அரசாங்கம் விழித்துக்கொண்டு, விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி

2022 மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசாங்கம், 2023 ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. மிக சமீபத்தில் தான், உள்ளூர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை ஏற்படுத்தியது இந்திய அரசாங்கம்.

உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் இந்தியாவின் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு: விரிவான பின்னணி | India Exporting Food Inflation To The World @getty

இந்த வரிசையில் அடுத்ததாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை வரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. உள்ளூர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இந்தியாவால் உலக நாடுகளில் விலைவாசி உயர்வு ஏற்படும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

அரிசி, வெங்காயம் மற்றும் சர்க்கரை ஏற்றுமதி தடையால் அப்படியான நெருக்கடி உருவாக வாய்ப்பு இருப்பதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) நம்புகிறது.

உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்தே முன்னெடுக்கப்படும் நிலையில், சர்க்கரை மற்றும் வெங்காயத்தின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்கிறது.

அரிசி விலை 20 சதவீதம் அதிகரிப்பு

மேலும், ஜூலை மாதத்தில் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், சர்வதேச அளவில் அரிசி விலையில் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 2011 செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இது மிக உயர்ந்த நிலை எனவும் கூறுகின்றனர்.

உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் இந்தியாவின் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு: விரிவான பின்னணி | India Exporting Food Inflation To The World @getty

வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததும், தாய்லாந்து அரிசி விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 42 நாடுகள் இந்தியாவிடமிருந்து மொத்த அரிசி இறக்குமதியில் 50% பெறுகின்றன.

மேலும், சீனா போன்ற உலகின் பல பகுதிகளில் மந்தநிலை இருந்த போதிலும் உலகளாவிய உணவு விலைகள் வரலாற்று உச்சத்தில் உள்ளன.

இந்த நிலையில், முக்கிய பொருட்களின் ஏற்றுமதி மீதான தடையை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் சர்வதேச நாணய நிதியம் உட்பட. பல்வேறு தரப்பிலிருந்தும் வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆனால் தேர்தல் தோல்விக்கு பயந்து, நரேந்திர மோடி அரசாங்கம் தடையை நீக்கும் கோரிக்கைகளை புறந்தள்ளும் என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US