ஆய்வக வைரங்களில் உலகின் முன்னணி நாடக இந்தியா மாறும் - IGI CEO
India Eyes Global Lead in Lab-Grown Diamonds: ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்களில் உலகின் முன்னணி நாடக இந்தியா மாறும் என IGI CEO தெரிவித்துள்ளார்.
முன்னணி நாடாக மாறும் திறன்
இந்தியாவிற்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் (Lab-grown) வைரங்களில் உலகின் முன்னணி நாடாக மாறும் திறன் உள்ளது என்று International Gemological Institute (IGI) நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி தேமாஸ்ப் பிரிண்டர் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, இந்தியா தற்போது ஆய்வக வைர உற்பத்தி சங்கிலியின் முழுமையான கட்டுப்பாட்டை பெற்றுள்ளது. வைரங்களை ஆய்வகத்தில் உருவாக்குதல், வெட்டுதல், பொலிஷ் செய்தல், சான்றிதழ் வழங்குதல் என அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது.
இதனால், இந்தியா எதிர்காலத்தில் 50 மடங்கு வளர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், “உலகளவில் இயற்கை வைரங்களில் 10 இல் 9 வைரங்களை இந்தியா வெட்டி பொலிஷ் செய்கிறது. ஆனால், ஆய்வக வைரங்களில் இந்தியா முழு மதிப்புச் சங்கிலியையும் கட்டுப்படுத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
IGI, அதிகரித்து வரும் உற்பத்தி அளவுகளை சமாளிக்க AI மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. “மனித நிபுணத்துவத்துடன் AI இணைந்து, அதிக அளவு வைரங்களை தரப்படுத்த உதவுகிறது” என்று பிரிண்டர் கூறினார்.
ஆய்வக வைரங்கள்
ஆய்வக வைரங்கள் இயற்கை வைரங்களைப் போலவே இரசாயன ரீதியாக ஒரே மாதிரியாக இருந்தாலும், அவை ஆய்வகத்தில் உருவாக்கப்படுகின்றன. இதனால், Gen Z மற்றும் Millennials தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு திருமண நகைகளில் 54 சதவீதம் ஆய்வக வைரங்களாக இருந்தன.
இயற்கை வைரங்கள் குறைந்த அளவில் கிடைப்பதால் அதிக மதிப்பைக் கொண்டுள்ளன. ஆனால், ஆய்வக வைரங்கள் உற்பத்தி திறனை அடிப்படையாகக் கொண்ட அளவு சார்ந்த வணிகம் என்பதால், இந்தியாவிற்கு உலக சந்தையில் முன்னிலை பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |