இந்திய விமானப்படைக்காக இஸ்ரேலின் AIR LORA சூப்பர்ஸோனிக் ஏவுகணை வாங்க திட்டம்
இஸ்ரேலின் AIR LORA சூப்பர்ஸோனிக் ஏவுகணையை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப்படை (IAF) தனது தொலைதூர தாக்குதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இஸ்ரேல் Aerospace Industries (IAI) உருவாக்கிய AIR LORA ஏவுகணையை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ‘Operation Sindoor’ நடவடிக்கையில் இந்திய விமானப்படை, இஸ்ரேலின் Rampage ஏவுகணையை வெற்றிகரமாக பயன்படுத்தியது.
Rampage ஏவுகணையின் ரேஞ்ச் 250 கிலோ மீற்றராக இருந்தாலும், AIR LORA 400 கி.மீ. வரை தாக்கும் திறன் கொண்டது.
இது எதிரியின் வான் பாதுகாப்பு அடையும் வரம்புக்குள் செல்லாமல் பாதுகாப்பாக இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.
AIR LORA ஏவுகணை 1,600 கிலோ எடை கொண்டது. Su-30MKI போன்ற இந்திய விமானப்படை போர்விமானங்களில் இருந்து ஏவ முடியும்.
இது மிக விரைவாக இலக்கை அடையும் சூப்பர்ஸோனிக் ஸ்பீட் கொண்டது மற்றும் துல்லியமான தாக்கத்துடன் (CEP < 10 மீ) குறைந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
இதன் fire-and-forget வடிவமைப்பு, ஏவிய பின் விமானத்திலிருந்து எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. அதோடு mid-flight update target வசதியால் ஏவியபிறகும் இலக்கை மாற்றவும் முடியும்.
GPS/INS navigation, anti-jamming தொழில்நுட்பம், அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படும் திறன் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், இந்த ஏவுகனை பல வகையான போர் விமானங்களில் இயக்கக்கூடியது, பல்வேறு போர்திட்டங்களுக்கேற்ற பல வகையான குண்டுகளை (warhead) பயன்படுத்தும் திறன் கொண்டது.
இந்தியாவுக்கான இந்த உயர் தர ஆயுத மேம்பாட்டுத் திட்டம், எதிரி இடங்களை துல்லியமாக அழிக்க புதிய கட்டத்தை உருவாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India AIR LORA missile deal, IAF Israeli missile upgrade, India supersonic ballistic missile, Operation Sindoor missile strike, AIR LORA missile features, IAI missile India, Indian Air Force long-range strike, Su-30MKI missile integration, Fire and forget missile India, Israeli defense tech in India