தந்தைக்கு புற்றுநோய் என தெரியவந்ததால் ஒரு முழுக்குடும்பமும் எடுத்த துயர முடிவு
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு குடும்பமே தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தந்தைக்கு புற்றுநோய்
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சித்ரகுப்த் நகர் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டில், நேற்றிரவு, கிருஷ்ணகுமார் (40), அவரது மனைவியான டோலி தேவி (35) மற்றும் தம்பதியரின் இரு மகள்கள் ஆகிய நால்வருடைய உடல்களும் உயிரற்ற நிலையில் தொங்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
சமீபத்தில் குமாருக்கு புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அந்தக் குடும்பமே தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |