பாகிஸ்தான், சீனாவை தொடர்ந்து இந்தியாவிற்கு அடித்துள்ள தங்க ஜாக்பாட்
இந்தியாவில் சமீபத்தில் டன் கணக்கில் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தங்க வளங்களை கண்டுபிடித்த பாகிஸ்தான் மற்றும் சீனாவை தொடர்ந்து, இப்போது இந்தியாவிலும் மிகப் பாரிய அளவிலான தங்கக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கவான்-கேவ்லாரி பகுதியில் தங்கம் செம்பு மற்றும் பல கனிமங்கள் இருப்பதாக இந்தியா புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI) உறுதிசெய்துள்ளது.
இப்பகுதியில் சுமார் 100 ஹெக்டர் பரப்பளவில் தங்கம் பரவியிருக்கலாம் என்றும், டன் கணக்கில் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தங்கம்
முன்னதாக இந்த ஆண்டில், பாகிஸ்தான் அதன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டோக் மாவட்டத்தில் ரூ.80,000 கோடி (PKR) மதிப்பிலான தங்கம் இருப்பதாக கண்டுபிடித்தது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இது மிக முக்கிய தேவையாக பார்க்கப்படுகிறது.
சீனா தங்கம்
அதேபோல், 2025 ஜனவரியில் சீனாவின் வடமேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 168 மெட்ரிக் டன் தங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக 2024 நவம்பரில் ஹுனான் தங்க சுரங்கத்தில் 1000 தந் தங்கம் கண்டிபிடிக்கப்பட்டது.
உலகின் மிகப்பாரிய தங்க உற்பத்தியாளரான சீனா, 2023-ஆம் ஆண்டில்மட்டும் 370 மெட்ரிக் டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது.
இந்தியாவின் தங்கம்
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 880 மெட்ரிக் டன் தங்கம் ஆகும். இந்த நிதியாண்டில் (FY26) இதுவரை புதிய தங்கம் சேர்க்கப்படவில்லை.
DSP Mutual Fund நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, உலக தங்க சந்தையின் மதிப்பு 23 ட்ரில்லியன் டொலராக உள்ளது. அதில் இந்தியா 15 சதவீதத்தை வைத்திருக்கிறது.
ஜபல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய தங்க இருப்பு, உலக தங்க சந்தையில் இந்தியாவை சற்று முன்னிலைப்படுத்து என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Gold Deposit Jabalpur, India Discovers Gold deposits, Madhya Pradesh Gold Deposit, India 2025 Gold Reserve, Geological Survey of India, India Pakistan China Gold, Gold News