இந்தியா பிக்ஸிங் செய்ததாக வந்த மெசேஜ்கள்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தகவல்
இந்திய கிரிக்கெட் அணி பிக்ஸிங் செய்ததாக தனக்கு தகவல்கள் வந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று வெற்றியில் இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 356 ஓட்டங்கள் குவித்தது.
அத்துடன் 213 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியை இந்திய கிரிக்கெட் அணி பதிவு செய்தது.
ஆனால் அடுத்த நாள் அதே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை எதிரான போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 213 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.
இந்த போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்தால் இறுதிப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கனவு சிக்கலாகி விடும் என்பதற்காக வேண்டும் என்றே இந்திய அணி தோல்வி அடைய போகிறது எனவும் இந்திய அணி பிக்ஸிங் செய்து விட்டது என்றும் தனக்கு தகவல்கள் வந்தது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்தர் சொன்ன தகவல்
இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், எனக்கு இந்தியா போட்டியை பிக்ஸ் செய்து விட்டதாக மெசேஜ்கள் வந்தன.
இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வேண்டுமென்றே பாகிஸ்தானை வெளியேற்ற தோல்வி அடையப் போகிறது என கூறினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் ஏன் தோல்வியடைய விரும்ப வேண்டும், அவர்களும் இறுதிப்போட்டிக்கு செல்லவே முயற்சிப்பார்கள், இது போன்ற தவறான தகவல்களை பரப்பாதீர்கள், இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பான முறையிலேயே விளையாடி வருகிறார் என அந்த வீடியோவில் சோயிப் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரது அந்த யூடியூப் வீடியோவிற்கு பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக தலைப்பு மற்றும் முகப்பில் "இந்தியா போட்டியை பிக்ஸ் செய்தது" சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |