15 இந்திய நகரங்களை தாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி: முறியடித்த ஆகாஷ், S-400 ஏவுகணைகள்
“ஆபரேஷன் சிந்தூர்” மூலம் இந்தியா நடத்திய உயர் துல்லியத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் கடந்த இரவில் 15 இந்திய நகரங்களை இலக்காக்கும் மிகப்பாரிய ஏவுகணை தாக்குதலை முயற்சித்தது.
ஆனால், இந்தியாவின் சொந்த தயாரிப்பான ‘ஆகாஷ்’ ஏவுகணை மற்றும் S-400 ‘சுதர்சன சக்ரா’ போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் அதனை முற்றிலும் முறியடித்தன.
தாக்குதலுக்குள்ளாக இருந்த முக்கிய நகரங்கள்: அவந்திப்புரா, ஸ்ரீநகர், ஜம்மு, பாதான்கோட், அம்ரித்தசர், கபூர்தலா, ஜலந்தர், லுதியானா, ஆதம்பூர், பாட்டிந்தா, சண்டிகர், நால், பலோடி, உத்தர்லை மற்றும் பூஜ்.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பு:
- DRDO உருவாக்கிய ஆகாஷ் ஒரு medium-range mobile surface-to-air missile பாதுகாப்பு அமைப்பாகும்.
- இது 45 கிமீ தூரம் வரை விமானங்களை மற்றும் ஏவுகணைகளை துல்லியமாகத் தடுக்க முடியும்.
- வேகம்: Mach 3.5
- குறிவைக்கும் உயரம்: 18,000 மீ.
- ஒரே நேரத்தில் 64 இலக்குகளை கண்காணித்து, 12-ஐ தாக்க முடியும்.
S-400 Triumf system:
- ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட இந்த அமைப்பு 400 கிமீ தூரம் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
- ஒரே நேரத்தில் 36 இலக்குகளை தாக்கும் திறன்
- 360 டிகிரி ரேடார் கண்காணிப்பு
- தேசிய தலைநகர் பகுதியிலும் மேற்குப் எல்லையிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அகாஷ் ஏவுகணை அமைப்பு மூலம் எல்லையில் டிஜிட்டல் பாதுகாப்பு வலை உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் நடுத்தாலில் அழிக்கப்பட்டன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு திறனை உலகுக்கு தெளிவாக காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Pakistan missile clash 2025, Akash missile system India, S-400 missile India, Operation Sindoor, India intercepts Pakistan missiles, Indian air defence Akash, Pakistan attack on Indian cities, Akashteer defence system, Indian Army news May 2025, Pakistan retaliatory strike failure