வெப்பமான பிப்ரவரி மாதம்... ஆசிய நாடொன்றில் கோதுமை சாகுபடி சிக்கலில்
பிப்ரவரி மாதம் இந்தியாவில் சராசரியை விட அதிக வெப்பநிலை இருக்கும் எனவும், இதனால் கோதுமை சாகுபடி பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அபரிமிதமான அறுவடை
கோதுமை மற்றும் ராப்சீட் சாகுபடி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் பிப்ரவரி மாதத்தின் சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, 2025ல் ஒரு அபரிமிதமான அறுவடையை எதிர்பார்க்கிறது. இதனால் அதிக செலவு செய்ய நேரிடும் இறக்குமதிகளைத் தவிர்க்கலாம் என்றும் திட்டமிடுகிறது.
கடந்த 2022 முதல் மிக மோசமான அறுவடையையே இந்தியா எதிர்கொண்டு வருகிறது. தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பநிலையில் ஏற்படவிருக்கும் திடீர் உயர்விற்குப் பிறகு பயிர்கள் பாதிக்கப்படலாம் என்றே அஞ்சப்படுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய கோதுமை நுகர்வோரான இந்தியா, 2022 ஆம் ஆண்டில் இருந்து பிரதான கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சாதனை விலை
தானிய உருவாக்கக் கட்டத்தில் அதிக வெப்பநிலை என்பது தொடர்ந்து நான்காவது ஆண்டாக விளைச்சலைக் குறைக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பிப்ரவரி மாதத்தில் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.
இந்தியாவின் வடக்கில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களும், மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேசமும் சேர்ந்து, நாட்டின் முன்னணி கோதுமை பயிரிடும் பகுதிகளாகும்.
வெப்பமான மற்றும் பருவம் கடந்த வெப்பமான வானிலை உற்பத்தியைக் குறைப்பதற்கும் மாநில இருப்புக்களில் நேரடியான சரிவுக்கும் வழிவகுக்கிறது. இதன் விளைவாக, இந்த மாத தொடக்கத்தில் கோதுமை விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.33,250 ($384.05) என்ற சாதனை விலையை எட்டியது.
மட்டுமின்றி, ராப்சீட் விளைச்சலில் ஏற்படும் எந்தவொரு வீழ்ச்சியும் உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவை அதன் இறக்குமதியை அதிகரிக்க கட்டாயப்படுத்தக்கூடும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |