பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, எல்பிஜி மானியம்., நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 5 அறிவிப்புகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எரிபொருள் விலை மீதான மத்திய கலால் வரியை கடுமையாக குறைப்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.
நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்:
1. கலால் வரி பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற வரிகளில் ஏற்படும் பாதிப்பை கணக்கில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 9.50 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7 குறைக்கப்படும்.
2. உர மானியம் கூடுதலாக ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படும். டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 1,003. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.200 மானியத்தைப் பெறுவார்கள், அதன்படி எரிவாயுவின் விலை 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.803 ஆக இருக்கும்.
4. இந்தியாவின் இறக்குமதி சார்ந்து அதிகம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதான சுங்க வரி குறைப்பு.
5. சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.