பிரான்ஸிடமிருந்து 26 ரஃபேல் கடற்படை விமானங்களை வாங்கும் இந்தியா
இந்தியாவிற்கு தேவையான 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்கள் பிரான்ஸிடமிருந்து வாங்கப்படவுள்ளது.
இந்திய கடற்படைக்கு 26 Rafale Marine போர் விமானங்களை வாங்கும் பிரான்சுடனான ஒப்பந்தம், இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது என்று கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தமானது அமைச்சரவை பாதுகாப்புக் குழுவின் (Cabinet Committee on Security) அனுமதிக்கு தயாராக உள்ளது.
"இது ஒரு அரசாங்கத்துக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால் விரைவில் இறுதி செய்யப்படும்" என திரிபாதி கூறினார்.
இதற்கான விலை 2016-ஆம் ஆண்டில் இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு சரிசெய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Rafale Marine அம்சங்கள்
கடற்படை பயன்பாட்டிற்கான Rafale Marine விமானம், இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்ட Rafale விமானங்களை விட வித்தியாசமானது. இதில் கடற்படை செயல்பாடுகளுக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான உத்தம் ரேடார் மற்றும் அஸ்திரா மற்றும் ருத்ரம் எனும் உள்நாட்டு ஆயுதங்களை சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரம் செல்லக்கூடிய Meteor ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் இதில் பொறுத்தப்படவுள்ளது.
இது நீளமான, தாங்கும் திறனை அதிகரித்துள்ள முன் பகுதி மற்றும் பலப்படுத்தப்பட்ட அடிப்பகுதியை கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்திய கடற்படையின் கடல் தாக்குதல் திறனை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. 2025-ஆம் ஆண்டிற்குள் இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |