தமிழ்நாட்டிற்கு வர பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கிய இந்திய அரசு - பின்னணி என்ன?
இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியா அனுமதி
காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்திய பிறகு, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
அதை தொடர்ந்து, நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் சந்தேகம் நிலவியது.
தற்போது, பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவிற்கு வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஹாக்கி உலகக்கோப்பை
பீகாரின் ராஜ்கிரில் நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7 வரை ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து, நவம்பர் 28 முதல் 10 டிசம்பர் வரை, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரையில், 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை நடைபெற உள்ளது.
இந்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளதன் மூலம், இரு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்குபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2036 கோடைகால ஒலிம்பிக் மற்றும் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த, இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
தகுதி பெற்ற அணியை, அரசியல் காரணங்களுக்காக அனுமதிக்க மறுத்தால் அது சர்வதேச விதியை மீறி, உலகளாவிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்க நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |