இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருதுகள் 2022; தமிழ்நாட்டிற்கு கிடைத்த இடம்
2022-ஆம் ஆண்டிற்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருதுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதன்படி, இந்தியாவில் சிறந்த 'தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதை' இந்தூர் பெற்றது, அதைத் தொடர்ந்து சூரத் மற்றும் ஆக்ரா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
அதேபோல், சிறந்த 'மாநில விருதை' மத்தியப் பிரதேசம் வென்றுள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
மூன்றாவது இடத்தை ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் பகிர்ந்து கொண்டன.
யூனியன் பிரதேசம் பிரிவில் சண்டிகர் முதலிடம் பிடித்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில், தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
செப்டம்பர் 27-ம் திகதி இந்தூரில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குவார் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
National Smart City Award 2022, India Smart Cities Awards 2022, Madhya Pradesh, best State Award, Tamil Nadu, Rajasthan, Uttar Pradesh