இலங்கை ஜனாதிபதிக்கு மாபெரும் வரவேற்பளித்த இந்தியா - இரு நாட்டு உறவும் மேம்படுமா?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பதவியேற்றதன் பின்னர் தனது முதல் வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ளார்.
இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று (16) முற்பகல் மாபெரும் சம்பிரதாய வரவேற்பு இலங்கை ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கான அவரது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் தொடக்கமாக இந்நிகழ்வு அமைந்தது.
ஜனாதிபதிக்கு மாபெரும் வரவேற்பு அளித்த இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல இராஜதந்திரிகளுடன், இலங்கைத் ஜனாதிபதிக்கு அன்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று செப்டம்பரில் பதவியேற்ற ஜனாதிபதி திஸாநாயக்கவை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.
சம்பிரதாய வரவேற்பின் போது, ஜனாதிபதி முர்முவும் ஜனாதிபதி திசாநாயக்கவும் தத்தமது அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை அறிமுகம் செய்து, இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான உறவுகளை வலியுறுத்தினர்.
விழாவைத் தொடர்ந்து, ஜனாதிபதி திசாநாயக்க ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை பிரதிபலித்துள்ளது.
இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இல்லத்தில் ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெறும்
இரு நாட்டு உறவும் மேம்படுமா?
பிற்பகலில் ஜனாதிபதி திசாநாயக்க, இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை சந்திக்க உள்ளார். மேலும் ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
குடியரசுத் தலைவர் மற்றும் அவரது குழுவினர் சுமார் மாலை 5.30 மணியளவில் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நேற்று (15) இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்கவின் வெளிநாட்டுக் கொள்கை முயற்சிகளில் இந்த விஜயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |