வெங்காயத்துக்கு ஏற்றுமதி வரி; வெங்காய விலையை கட்டுப்படுத்த இந்திய அரசின் முக்கிய முடிவு
தக்காளியை போல் நாட்டில் வெங்காயத்தின் விலை பயங்கரமாக உயராமல் கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, வெங்காய ஏற்றுமதிக்கு, 40 சதவீத வரியை, இந்திய அரசு விதித்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு டிசம்பர் 31-ம் திகதி வரை வரி விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பரில் வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 300 ரூபாயை தாண்டிய தக்காளி விலை குறைந்து வரும் நிலையில் வெங்காயம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் மாதம் புதிய பயிர் வரும் வரை வெங்காயத்தின் விலையை குறைக்கும் நோக்கத்துடன் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பஃபர் ஸ்டாக்களில் இருந்து வெங்காயத்தை உடனடியாக விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Image Credits: Amarujala
நுகர்வோர் கூட்டுறவு மற்றும் பெருநிறுவனங்களால் நடத்தப்படும் இ-ஏலம், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தள்ளுபடி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விலை ஸ்திரத்தன்மை நிதியத்தின் (PSF) கீழ் அரசாங்கம் 3 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைத்துள்ளது.
வெங்காய விலையில் சிறிது உயர்வு ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ஆம் திகதி நிலவரப்படி, வெங்காயத்தின் தேசிய சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.27.90 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டை விட சராசரியாக ரூ.2 அதிகம்.
tbsNews
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |