இந்தியாவில் எத்தனை Startup நிறுவனங்கள் உள்ளன தெரியுமா? ஆச்சரியமளிக்கும் ரிப்போர்ட்
இந்தியாவில் 429 ஸ்டார்ட் அப் (Start Up) நிறுவனங்கள் உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
Startup Genome அறிக்கை
40க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 80 நகரங்களில், 60க்கும் மேற்பட்ட அளவீடுகளை Startup Genome பகுப்பாய்வு செய்தது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளாவில் தொடங்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய Startup Genomeயின் அறிக்கையின்படி, உலகில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
இளம் தொழில்முனைவோர், இளைஞர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்லியன் டொலர் வர்த்தகம்
இதுவரை இந்தியா 429 ஸ்கேல்அப்களை பதிவு செய்துள்ளதாக Startup Genome கூறியுள்ளது. VC முதலீடுகளில் 127 பில்லியன் டொலர்கள் ஈர்க்கப்பட்டதுடன், மொத்த தொழில்நுட்ப முதலீட்டு மதிப்பு 446 பில்லியன் டொலர்களாக குவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆசியாவிற்கு வெளியே உள்ளனர்.
உலகளவில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் பிரித்தானியா நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |