ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகள் - 5வது இடத்தில் இந்தியா
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
5வது இடத்தில் இந்தியா
ஒவ்வொரு ஆண்டும் 'உலக இராணுவச் செலவினப் போக்குகள்' என்ற அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டு வருகிறது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் நாடுகள் ராணுவத்திற்கு செலவு செய்தது தொடர்பான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
Global military spending rise continues as European and Asian expenditures surge. New #SIPRI data on global #MilitarySpending out now ➡️ https://t.co/v3R3B7b1MV
— SIPRI (@SIPRIorg) April 26, 2026
Read the fact sheet ➡️ https://t.co/fN5T0soepC#SIPRI #MilitaryExpenditure #DefenceBudget #GlobalSecurity… pic.twitter.com/NmAtrneZpn
இந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக உலக நாடுகள் 2.89 ட்ரில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளன. இது 2.9 சதவீத உயர்வு ஆகும்.
இதில், இந்தியா 92.1 பில்லியன் டொலர்கள் செலவிட்டு 5வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ராணுவ செலவில் இந்தியாவின் பங்களிப்பு 3.2 சதவீதமாகும். மேலும், கடந்த ஆண்டை விட இந்தியா ராணுவ செலவை 8.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுடனான ஆபரேஷன் சிந்தூர் மோதலுக்கு பின்னர், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், ஆகியவற்றை இந்தியா வாங்கியுள்ளது.
இதே போல், பாகிஸ்தானும் தனது ராணுவ செலவை 11 சதவீதம் அதிகரித்து 11.9 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. ஒட்டுமொத்த பங்களிப்பில், 0.4 சதவீதத்துடன் பாகிஸ்தான் இந்த பட்டியலில் 31வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் அமெரிக்கா
954 பில்லியன் டொலர்களுடன் அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த பங்களிப்பில், 33 சதவீதம் ஆகும்.

அதேவேளையில், உக்ரைனுக்கான உதவியை நிறுத்தியதன் மூலம், முந்தைய ஆண்டை விட 7.5 சதவீதம் குறைந்துள்ளது.
336 பில்லியன் டொலர்களுடன் சீனா இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த பங்களிப்பில், 12 சதவீதம் ஆகும்.
190 பில்லியன் டொலர்களுடன் ரஷ்யா 3வது இடத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த பங்களிப்பில், 6.6 சதவீதம் ஆகும்.
114 பில்லியன் டொலர்களுடன் ஜேர்மனி 4வது இடத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த பங்களிப்பில், 3.9 சதவீதம் ஆகும்.
ஒட்டுமொத்த பங்களிப்பில், முதல் 5 நாடுகள் 58 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |