பாகிஸ்தானுக்கு அடுத்த பேரிடி... சிந்து நதி நீர் ஒப்பந்தம் இனி வாய்ப்பே இல்லை: முடித்து வைத்த இந்தியா
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இனி ஒருபோதும் மீட்டெடுக்காது என்றும் பாகிஸ்தானுக்குப் பாயும் நீர் உள்நாட்டு பயன்பாட்டிற்காக திருப்பி விடப்படும் என்றும் இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா உறுதி
குறித்த தகவலை இந்தியாவின் உள்விவகார அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். இந்தியாவின் காஷ்மீரில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதை பயங்கரவாதச் செயல் என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் பயன்பாட்டை நிர்வகிக்கும் 1960 ஒப்பந்தத்தில் பங்கேற்பதை இந்தியா நிறுத்தியது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் உற்பத்தியாகும் மூன்று ஆறுகள் மூலம் பாகிஸ்தானின் 80 சதவீத வேளாண் நிலங்களுக்கு நீர் அணுகலை உறுதி செய்தது. ஆனால் காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை என்பதை பாகிஸ்தான் கூறி வந்தது.
கடந்த மாதம் இரண்டு அண்டை நாடுகளும் போர் நிறுத்தம் செய்து கொண்ட போதிலும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் இந்தியா முடிவெடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையிலேயே இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஷா தற்போது அதை உறுதி செய்துள்ளார்.
இனி எந்த காலத்திலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீட்டெடுக்காது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரை ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் ராஜஸ்தானுக்குக் கொண்டு செல்வோம்.
தண்ணீரின்றி தவிக்கும்
நியாயமற்ற முறையில் பெற்று வரும் தண்ணீரின்றி பாகிஸ்தான் தவிக்கும் என்பது உறுதி எனவும் ஷா கூறியுள்ளார். ஷா கூறியுள்ள கருத்து உண்மையில் இந்திய அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்கப்படுவதால், ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மிக விரைவில் தொடங்கலாம் என்றிருந்த பாகிஸ்தானின் நம்பிக்கையை மங்கச் செய்துள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு ஒருதலைப்பட்சமாக பின்வாங்க முடியாது என்றும், பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரைத் தடுப்பது போர் நடவடிக்கையாக கருதப்படும் என்றும் பாகிஸ்தான் கடந்த காலங்களில் கூறியிருந்தது.
மட்டுமின்றி, சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவுக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலையும் பாகிஸ்தா ஆராய்ந்து வருகிறது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |