இந்திய கடற்படை திறன்களை மேம்படுத்த ரூ.5,000 கோடி முதலீடு., 175 போர் கப்பல்களாக அதிகரிக்கும் முயற்சி
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது கடற்படை திறன்களை மேம்படுத்த ரூ.5,000 கோடி முதலீட்டுடன் மாபெரும் விரிவாக்கத்திற்குத் தயாராகி வருகிறது.
Mazagon Dock Shipbuilders(MDL) நிறுவனம் புதிய போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் திறனுடன் விரிவடைய இருக்கிறது.
இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள தற்போதைய MDL நிறுவனத்தின் அருகே 10 ஏக்கர் கடற்பரப்பை மீட்டெடுத்து இரண்டு புதிய கட்டுமான தளங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒரே நேரத்தில் பல போர் கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் உருவாக்கும் திறனை MDL பெறும்.
தற்போது வருடத்திற்கு 40,000 டன்கள் கையாளும் திறனை, விரைவில் 80,000 டன்களாகவும், பின்னர் 2 லட்சம் deadweight டன்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சித் திட்டம், 2047-க்கு 175 முக்கிய போர் கப்பல்களை கொண்ட இந்தியக் கடற்படை கனவுக்கு அடிப்படை அமைக்கிறது.
இந்நிலையில், ரூ.1.06 லட்சம் கோடி மதிப்புள்ள இரண்டு உயர்தர நீர்மூழ்கி கப்பல் திட்டங்களும், இந்த விரிவாக்கம் மூலம் நன்கு செயல்பட முடியும்.
இந்திய கடற்படை தற்போதைய நிலையில் 11 நீர்மூழ்கி கப்பல்களையும் 10 போர் கப்பல்களையும் ஒரே நேரத்தில் உருவாக்கி வருகிறது.
ஆனால், சீனாவின் 370 கப்பல்கள் கொண்ட கடற்படை துரித வளர்ச்சிக்கு எதிராக, இந்தியா இப்போது தற்சார்பு உற்பத்தில் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பதிலளிக்க முயல்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |