ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல்முறை; டெல்லி வர பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா அழைப்பு
india invites pakistan for sco Civilisational Dialogue Forum: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல்முறையாக, பாகிஸ்தான் அமைச்சர் டெல்லிக்கு வர இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
SCO கருத்தரங்கு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) பெலாரஸ், சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தியா 2017 ஆம் ஆண்டில் முழு உறுப்பினரானது.
நவம்பர் 20 முதல் 22 வரை, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிக உரையாடல் கருத்தரங்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கிற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 10 உறுப்பு நாடுகளையும் இந்தியா அழைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்தது.

இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஒரு மூத்த பாகிஸ்தான் அமைச்சருக்கு விடுக்கப்படும் முதல் அழைப்பும் இதுவாகும்.
பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
அவர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டால், 2023 மே மாதம் கோவாவில் நடைபெற்ற SCO வெளியுறவு அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்துகொண்ட பிறகு, ஒரு மூத்த பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.