பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியாவும் இஸ்ரேலும் இரகசிய திட்டம் தீட்டியதை CIA அதிகாரி தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் CIA அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow), 1980-களில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணுசக்தி நிலையத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாக வெளியிட்ட தகவல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த திட்டம், பாகிஸ்தான் அணுஆயுதம் உருவாக்குவதை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பார்லோ, அந்த காலத்தில் அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் நேரடியாக இந்த திட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும், புலனாய்வு வட்டாரங்களில் இதைப் பற்றி கேட்டதாக கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு “இந்திரா காந்தி ஒப்புதல் அளிக்காதது வருத்தம்தான். அது பல பிரச்சனைகளைத் தீர்த்திருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் திட்டம் அமெரிக்காவின் ரோனால்ட் ரீகன் ஆட்சி காலத்தில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தான் போருக்கு அமெரிக்கா ரகசியமாக ஆதரவு அளித்த காலத்தில் இருந்தது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அந்த ஆதரவு பாதிக்கப்படும் என்பதால் அமெரிக்கா கடுமையாக எதிர்த்திருக்கும் என பார்லோ கூறினார்.
பாகிஸ்தான், அந்த ஆதரவை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்காவை 'blackmail' செய்ததாகவும், காஹூட்டா திட்டம் பின்னர் 1998-இல் அணுஆயுத சோதனையில் வெற்றியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்கள், தெற்காசியாவின் அணுஆயுத வரலாற்றில் மறைக்கப்பட்ட பாகங்களை வெளிச்சமிடுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Israel Kahuta strike plan, CIA officer Richard Barlow Pakistan, covert nuclear operation India, Indira Gandhi Kahuta decision, Pakistan nuclear facility Kahuta, Israel India secret mission 1980s, Reagan era nuclear diplomacy, AQ Khan Kahuta enrichment plant, US opposition to Kahuta strike, South Asia nuclear history