ஈரான் தொடர்பில் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
ஈரான் பயணம் தொடர்பில் இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானிலிருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
ஈரான் தொடர்பில் தன் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள இந்தியா, இந்தியர்கள் ஈரானுக்குப் பயணிக்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
— India in Iran (@India_in_Iran) June 8, 2026
ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள இந்திய தூதரகம் இன்று விடுத்துள்ள செய்தி ஒன்றில், ஏற்கனவே ஈரான் பயணம் தொடர்பில் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆலோசனையை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

ஈரானுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே ஈரானிலிருக்கும் இந்தியர்கள் எப்படியாவது அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இஸ்ரேல் ஈரானுக்கிடையிலான மோதல் மும்முரமாகி வருவதைத் தொடர்ந்து ஈரானில் வாழும் தன் குடிமக்களுக்கு இந்தியா இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |