பிரபல அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய பகிரங்க எச்சரிக்கை!
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நாட்டின் சட்டங்களை பின்பற்றுமாறு அமெரிக்க சமூக வலைதள நிறுவனங்களுககு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்டென்ட் ஒழுங்குமுறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கும் ட்விட்டருக்கும் இடையேயான மோதலுக்குப் பிறகு ரவி சங்கர் பிரசாத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையற்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் , ட்விட்டர், பேஸ்புக், LinkedIn மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களை பெயரிட்டு, இவர்கள் இந்தியாவில் செயல்படுவதை வரவேற்கிறோம், ஆனால் இந்தியாவின் விதிகளின்படி செயல்பட்டால் மட்டுமே என தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 1,100 கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்குவதற்கான அரசாங்க உத்தரவை அமெரிக்க நிறுவனமான ட்விட்டர் முழுமையாக பின்பற்ற மறுத்தததை அடுத்து இந்தியா புதன்கிழமை ட்விட்டரை கண்டித்தது.
இந்த உத்தரவுகள் இந்திய சட்டத்தில் இல்லை என்று நம்புவதால் அனைத்து கன்டென்ட்களையும் நீக்கவில்லை என்று ட்விட்டர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.