ரஷ்யாவின் முக்கிய பெட்ரோல் வழங்குநராக உருவெடுத்துள்ள இந்தியா
India becomes key petrol supplier to Russia: ரஷ்யாவிற்கு முக்கிய பெட்ரோல் விநியோக நாடாக இந்தியா மாறியுள்ளது.
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா தனது தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யா தினசரி 1,25,000 பீப்பாய் பெட்ரோல் (சுமார் 4.7 லட்சம் டன்) இறக்குமதி செய்துள்ளது. இதில் இந்தியா, துருக்கி, மொராக்கோ ஆகிய மூன்று நாடுகள் முக்கிய பங்காற்றின.

குஜராத்தில் அமைந்துள்ள Nayara Energy-யின் Vadinar சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் Rosneft நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு ரஷ்யாவிற்கு பெருமளவில் பெட்ரோல் அனுப்பியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா சுமார் 10 லட்சம் பீப்பாய் பெட்ரோல் ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளது.
2022 முதல் இந்தியா ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியா தினசரி 2.6 மில்லியன் பீப்பாய் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இதன் மூலம் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் பெட்ரோல் இறக்குமதியில் 55 சதவீதம் (சுமார் 2.6 லட்சம் டன்) தடை செய்யப்பட்ட கப்பல்கள் மூலம், 40 சதவீதம் இரகசிய ship-to-ship (STS) transfers மூலம் வந்ததாக எரிசக்தி ஆய்வு நிறுவனம் Vortexa தெரிவித்துள்ளது.
உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யா, தனது உள்நாட்டு தேவைக்காகவே பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவிற்கு எரிபொருள் வழங்கும் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |