ஆசிய விளையாட்டு போட்டி; பிறந்தநாளில் தங்க வென்ற இந்தியாவின் லவ்லினா
lovlina won gold in gold in asian games on birthday:ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவின் லவ்லினா தனது பிறந்தநாளான இன்று குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
பிறந்தநாளில் தங்க வென்ற இந்தியாவின் லவ்லினா
ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன்(lovlina borgohain), சீன வீராங்கனை பவ் ஜியியை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வீழ்த்தி தங்கம் வென்றார்.

2014 ஆம் ஆண்டில் மேரி கோமிற்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை லவ்லினா பெற்றுள்ளார்.
அக்டோபர் 2 ஆம் திகதியான இன்று, தனது 29 வது பிறந்தநாளை கொண்டாடும் லவ்லினா போர்கோஹைன் பிறந்தநாளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Lovlina Borgohain celebrates her birthday with 𝗚🥇𝗹𝗱, beating China’s Bao Ziyi in the Women’s 75kg Final! 🥊
— Sony Sports Network (@SonySportsNetwk) October 2, 2026
Watch the 20th Asian Games Aichi-Nagoya 2026 LIVE on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #AsianGames #AichiNagoya2026… pic.twitter.com/qy9JIRIc1k
அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பரமுகியா கிராமத்தைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹைன், ஆரம்பத்தில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்று, பின்னர் குத்துச்சண்டைக்கு மாறினார்.
முன்னதாக 2022 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். மேலும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், 2022 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2023-ல் உலக சாம்பியன் பட்டம், 2026 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
அவரது செயல்பாட்டினை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு 2020 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2021 ஆம் ஆண்டில் கேல் ரத்னா விருதும் வழங்கியது .
ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா இதுவரை 15 தங்கம், 25 வெள்ளி, 35வெண்கலம் 75 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.