அடித்து நொறுக்கிய சச்சின்.,சிக்ஸர் மழைபொழிந்த யுவராஜ்! அரையிறுதியில் தூளான அவுஸ்திரேலியா
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதியில், இந்திய அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.
தெறிக்கவிட சச்சின், யுவ்ராஜ் சிங்
ராய்ப்பூரில் நடந்த IML அரையிறுதியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் பவுண்டரிகளை தெறிக்கவிட, யுவ்ராஜ் சிங் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 30 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
𝐅𝐨𝐮𝐫-𝐞𝐯𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫-𝐁𝐥𝐚𝐬𝐭𝐞𝐫! 💪🏏
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 13, 2025
Witness Sachin's magic unfold in the #IMLT20 semi-final! 🙌🤩
Watch the action LIVE ➡ on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/jTEdGqkg8S
மறுமுனையில் ருத்ர தாண்டவமாடிய யுவ்ராஜ் சிங் (Yuvraj Singh) 30 பந்துகளில் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 59 ஓட்டங்கள் குவித்தார்.
ஸ்டுவர்ட் பின்னி 36 (21) ஓட்டங்களும், யூசுப் பதான் 23 (10) ஓட்டங்களும், இர்பான் பதான் 19 (7) ஓட்டங்களும் விளாச, இந்தியா மாஸ்டர்ஸ் 220 ஓட்டங்கள் குவித்தது.
𝙏𝙝𝙚 𝙂𝙧𝙚𝙖𝙩𝙚𝙨𝙩 𝘽𝙖𝙩 𝙎𝙬𝙞𝙣𝙜 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙒𝙤𝙧𝙡𝙙 🏏🙌
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 13, 2025
Watch the action LIVE ➡ on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/uYSgWczRgp
சுருண்ட அவுஸ்திரேலியா
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, ஷாபாஸ் நதீம் மற்றும் வினய் குமாரின் மிரட்டல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
#AustraliaMasters in a spot! ⚠️
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 13, 2025
A 𝐟𝐢𝐞𝐫𝐲 𝐨𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 𝐬𝐩𝐞𝐥𝐥 has #AustraliaMasters reeling! 🔥
Watch the action LIVE ➡ on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/hKup1DJL5M
அந்த அணி 18.1 ஓவரில் 126 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பென் கட்டிங் (Ben Cutting) 39 (30) ஓட்டங்கள் எடுத்தார்.
𝐁𝐞𝐧 𝐂𝐮𝐭𝐭𝐢𝐧𝐠, making it rain sixes! 🌧️
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 13, 2025
2️⃣ colossal hits, one 𝐥𝐨𝐮𝐝 𝐬𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭 #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/y9fERgYfDk
இந்தியா தரப்பில் ஷாபாஸ் நதீம் 4 விக்கெட்டுகளும், வினய் குமார் மற்றும் இர்பான் பதான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |