இங்கிலாந்து வீரர் ப்ரூக் 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி ப்ரூக் (Harry Brook) இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
IPL 2025 தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
BCCI விதிகள் மற்றும் தடை
BCCI (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) முன்பே அறிவித்தது போல, IPL ஏலத்தில் இடம்பெற்ற பிறகு போட்டியில் விளையாட மறுக்கும் எந்தவொரு வீரருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.
ஹாரி ப்ரூக் இதை மீறி உலகளாவிய கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என IPL-ல் இருந்து வெளியேறினார்.
இதனால் BCCI இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் (ECB) ப்ரூக்கிற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியானது ப்ரூக்கை ரூ.6.25 கோடி செலவில் ஏலத்தில் வாங்கியது.
ஆனால், போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்பு ப்ரூக் விளையாட மறுத்துவிட்டார்.
இதே விடயம் 2024 IPL சீசனிலும் நடந்ததால், BCCI அனைத்து வெளிநாட்டு வீரர்களுக்கும் புதிய விதிகளை அறிவித்தது.
ப்ரூக்கின் தொடர்ச்சியான பின்வாங்கல்
2024-ம் ஆண்டிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ப்ரூக்கை நம்பி எடுத்திருந்தது. ஆனால், அவர் விளையாட மறுத்ததால் அணியின் திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டிற்கும் அவர் பின்வாங்கியதால், BCCI கடுமையான முடிவை எடுத்துள்ளது.
டெல்லி அணியின் நிலை
ப்ரூக்கிற்கு மாற்று யார் என்பதை டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும், அணியின் புதிய கேப்டன் யார் என்பது தொடர்பாக KL ராகுல், அக்சர் பட்டேல், ஃபாப் டு பிளஸிஸ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி மார்ச் 24-ஆம் திகதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து டாக்டர் YS ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் தனது முதல் போட்டியை ஆடுகிறது.
அணியின் பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Harry Brook, IPL, Delhi Capitals, Harry Brook banned from IPL for two years