கத்தார் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு
கத்தாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு இந்தியாவில் தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
கத்தாரின் தந்தை என அழைக்கப்படும் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி 74 வயதில் நேற்று (ஜூலை 12) காலமானார்.
அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று (ஜூலை 13) ஒரு நாள் தேசிய துக்கத்தை அனுசரிக்கிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அந்த நாளில் நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், எந்தவிதமான அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, “ஷேக் ஹமத் ஒரு தலைவராக கத்தாரை அபாரமான வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் கொண்டு சென்றார். அவர் இந்தியாவின் உண்மையான நண்பர்” என்று சமூக ஊடகங்களில் அனுதாபம் தெரிவித்தார்.
ஷேக் ஹமத் 1995 முதல் 2013 வரை கத்தாரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சிக் காலத்தில், கத்தார் உலகின் மிகப்பெரிய LNG (Liquefied Natural Gas) ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது.
மேலும், இந்திய-கத்தார் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் 1999, 2005 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்தார்.
கத்தார் அரசு நான்கு நாள் பொது துக்கத்தை அறிவித்துள்ளது. இந்திய அரசின் சார்பில், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சரான கிரண் ரிஜிஜு விரைவில் கத்தாருக்கு சென்று அனுதாபம் தெரிவிக்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |