பழிவாங்கும் பட்டியலில் ட்ரம்ப், மெலோனி உட்பட 13 பெயர்கள்
ஈரானில் வெளிவரும் பத்திரிக்கையொன்றில், கமேனி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கல் பட்டியலை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி பழிவாங்கும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஈரானின் தலைநகரில் இருந்து வெளிவரும் Hamshahri என்ற பத்திரிகை, 13 வெளிநாட்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது உலகளவில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையில் வெளியிடப்பட்ட பட்டியலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளனர்.
மேலும், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், இந்த பட்டியல் ஈரான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லை. பத்திரிகை வெளியிட்ட தகவல் மட்டுமே. இருப்பினும், இது உலகளவில் பெரும் கவலைக்குரியதாக உள்ளது.
ஈரான், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க தாக்குதல்களை கண்டிக்காததையும், அமெரிக்க விமானங்களுக்கு தங்கள் வான்வழியை பயன்படுத்த அனுமதித்ததையும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவம், மத்திய கிழக்கு போரின் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |