3-வது அலையை தடுக்க இது ஒன்று தான் வழி! தப்பிக்குமா இந்தியா?
இந்தியாவில் கொரோனா வைரஸின் 3-வது அலையை தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் 86 லட்சம் தடுப்பூசி போட வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கோவிட்டின் மூன்றாவது அலை நாடு முழுவதும் பரவக்கூடாது என்று இந்தியா கடுமையாக வேண்டிக்கொண்டு இருக்கிறது. நிர்வாகிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இதுபோன்ற ஒரு நிகழ்வைத் தடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இருப்பினும், தற்போது இருக்கும் தடுப்பூசி போடும் விகிதம் இந்தியாவில் மூன்றாவது அலையை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை.
இந்த நிலையில், இந்தியாவில் மூன்றாவது கோவிட் அலைகளைத் தடுக்க வேண்டும் என்றால், இந்தியா தனது 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையில் குறைந்தது 60 சதவீத மக்களுக்கு, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தபட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, அடுத்த ஒவ்வொரு நாளும் 86 லட்சம் (8.6 மில்லியன்) தடுப்பூசி போட வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆயினும்கூட, இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக, இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனை ஒப்புடும்போது 4.6 மில்லியன் பற்றாக்குறையாக உள்ளது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை, வெறும் 1.5 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றனர், இது இலக்கை விட 7.1 மில்லியன் குறைவு.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் பற்றாக்குறை ஏற்படுமெனில், டிசம்பருக்குள் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கு பாதிக்கப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு 8.6 மில்லியன் என்கிற கணிப்பை தாண்டி அதிக துடுப்புசிகளை செலுத்த வேண்டும் என்ற சுமை ஏற்படும்.