ரஷ்யாவை கைவிடும் இந்தியா... ட்ரம்பின் முயற்சிகளுக்கு கடைசியில் கிடைத்த வெற்றி
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இனி சீனா
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பெரிய படி என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் தாம் மகிழ்ச்சியடையவில்லை,
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் இன்று எனக்கு உறுதியளித்தார் என்று வெள்ளை மாளிகை நிகழ்வின் போது ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது மிகப்பெரிய முன்னேற்றம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இனி சீனாவும் இதே முடிவை எடுக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியாவின் உறுதிமொழி, உலகளாவிய எரிசக்தி விவகாரத்தில் ஒரு சாத்தியமான திருப்புமுனையாக பார்க்கப்படும்.
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை முடக்க அமெரிக்கா முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் நரேந்திர மோடி ட்ரம்பிற்கு உறுதி அளித்துள்ளார்.
தனிமைப்படுத்தல்
மேலும், இது ரஷ்யாவின் முன்னணி எரிசக்தி வாடிக்கையாளர்களில் ஒருவரின் பெரிய மாற்றத்தைக் குறிக்கும், மட்டுமின்றி, ரஷ்ய கச்சா எண்ணெயை இன்னும் இறக்குமதி செய்யும் பிற நாடுகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும்.
ரஷ்யா மீது பல்வேறுத் தடைகளை மட்டுமே விதிப்பதற்குப் பதிலாக, பொருளாதார தனிமைப்படுத்தலை அமுல்படுத்த இருதரப்பு உறவுகளைப் பயன்படுத்த ட்ரம்ப் முயன்றுள்ளார்.
மேலும், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா உடனையே நடவடிக்கை எடுக்காது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், ஆனால் மிக விரைவில் அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |