அகதிகள் தங்க இந்தியா சத்திரம் இல்லை - இலங்கை தமிழரின் மனுவை நிராகரித்த இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் வசிக்க கோரிக்கை வைத்த இலங்கை தமிழரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கை தமிழருக்கு சிறைத்தண்டனை
இலங்கை தமிழரான சுபாஸ்கரன் என்பவர், தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட பிரிவு (UAPA) இன் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2018 ஆம் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், 7 வருடங்களாக தண்டனையை குறைத்ததோடு, தண்டனை காலம் முடிந்ததும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யுமாறு, இலங்கை தமிழரான சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்தியா சத்திரம் இல்லை
மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், "மனுதாரர் ஒரு இலங்கை தமிழர் மற்றும் அகதியாக வந்தவர். அவர் இலங்கைக்கு திரும்பினாள் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் வருகின்றனர். எனவே இவரையும் இந்தியாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "உலகம் முழுவதும் இருந்து அகதிகள் வந்து குடியேற இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை. ஏற்கனவே நாங்கள் 140 கோடி மக்கள் தொகையுடன் அவதிப்படுகிறோம்.
இலங்கையில் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் வேறு நாடுகளுக்கு செல்லுங்கள். சட்டப்பிரிவு 19ன் படி இந்திய, குடிமக்களுக்கு மட்டுமே இந்தியாவில் வசிப்பதற்கான உரிமை உள்ளது" என கூறி அவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |