சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு! இரு நாடுகளுக்கு இடையே உராய்வு
இந்திய எம்.பி-க்கள் பலர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக சிங்கப்பூர் பிரதமர் கூறிய கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில், சிங்கப்பூர் எதிர்க்கட்சி உறுப்பினர் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதத்தில் பிரதமர் லீ சியன் லூங் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இந்திய மக்களவையில் உள்ள கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன என்று லீ கூறினார்.
எவ்வாறாயினும், பல குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரில் வந்து விளக்கமளிக்கமாறு சிங்கப்பூர் தூதருக்கு சம்மன் அழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.