இந்தியாவோ நிலவில் கால் பதிக்கிறது..நம் குழந்தைகள் சாக்கடையில்! பாகிஸ்தான் எம்.பி பேச்சு
உலக நாடுகள் நிலவுக்கு செல்லும் போது நம் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து இறக்கிறார்கள் என்று பாகிஸ்தான் எம்.பி பேசியுள்ளார்.
அவர் பேசியது
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முட்டாஹிடா குவாமி கட்சி எம்.பி சையத் முஸ்தபா கமால் (Syed Mustafa Kamal) பேசுகையில், "உலக நாடுகள் நிலவுக்கு செல்லும் நேரத்தில், கராச்சியில் குழந்தைகள் திறந்த சாக்கடையில் விழுந்து இறந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருபுறம், இந்தியா நிலவில் கால் பதித்ததாக செய்திகள் வந்தாலும், மறுபுறம், கராச்சியில் திறந்திருந்த சாக்கடையில் விழுந்து குழந்தை இறந்தது பற்றிய செய்திகள் வருகின்றன.
கராச்சியில் 70 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 2.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத சூழலில் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் வருவாய் என்ஜின் கராச்சி நகரத்தில் இரண்டு துறைமுகங்கள் உள்ளன. மேலும், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நுழைவாயிலாகவும் உள்ளது.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக கராச்சிக்கு சிறிதளவு கூட தூய்மையான தண்ணீர் தர முடியவில்லை. அப்படி வந்தால் கூட மாஃபியா கும்பல் பதுக்கி வைத்து மக்களுக்கு விற்கிறார்கள்" என்றார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |