சிங்கப்பூரில் வசிக்கும் 65 வயது இந்தியருக்கு சிறை தண்டனை! வெளியான காரணம்
சிங்கப்பூரில் குடித்துவிட்டு பேருந்தில் ரகளை செய்த இந்தியருக்கு 5 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள Little India நகரில் வசித்து வருவபர் மூர்த்தி நாகப்பன். 65 வயது மதிக்கத்தக்க இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபோதையில் பேருந்தில் பஸ் டிரைவர் அவரிடம் சரியாக மாஸ்க் அணியும்படி கூறியுள்ளார். குடிபோதையில் இருந்த மூர்த்தி டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதையடுத்து மற்ற பயணிகள் தட்டி கேட்ட போது அவர்களையும் கொச்சை வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பொலிஸ் மூர்த்தி நாகப்பனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது போல் இரண்டு முறை நடந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மூர்த்தி நாகப்பன் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது மூர்த்தி நாகப்பன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 5 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.