அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் வெற்றி பெற்றார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸின் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் இருந்து ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் ஒரு தீர்க்கமான ஆணையை வென்றார், அவரது எதிர் வேட்பாளரான அகமது நடத்திய பிரச்சாரத்தை வெற்றிகரமாக முறியடித்தார்.
இல்லினாய்ஸின் எட்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி (48), ஜுனைத் அகமதுவை (71) சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் தோற்கடித்தார்.
வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து, “எனது தொகுதி மக்கள் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை விரும்புகிறார்கள். காங்கிரசில், நான் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும், பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்காகவும், பணவீக்கம் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகவும் இருக்கிறேன். வரும் முக்கியமான மாதங்களில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க நான் தொடர்ந்து அயராது உழைப்பேன்” என்று கூறினார்.
அவர் 2017 முதல் இல்லினாய்ஸின் 8-வது காங்கிரஸ் மாவட்டத்திற்கான அமெரிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார்.
புது டெல்லியில் பிறந்தவரான ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை ராஜபாளையம். தாயார் தஞ்சாவூர். இவருடைய மனைவியும் தமிழ்நாடு தான்.
இதையும் படியுங்கள்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் கறுப்பினப் பெண்மணி!
இவருடைய தந்தைக்கு அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க, அங்கு சென்றனர். பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். மருத்துவமனை பொறுப்பாளராக இருந்த போது ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது.
2004-ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரச்சார ஆலோசகராக பணியாற்றினார்.
2008-ல் ஒபாமாவின் தனி ஆலோசகராக இருந்தார். 2007 - 2009 காலகட்டத்தில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராக இருந்தார்.
Great to meet more voters today! pic.twitter.com/JRRzJ2QEf2
— Raja Krishnamoorthi (@RajaForCongress) June 28, 2022
அவர், வரும் நவம்பர் 8-ஆம் திகதி பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் கிறிஸ் டர்கிஸை எதிர்கொள்கிறார்.
கடந்த மாதம், அவரது சிறந்த தொழில் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை பாராட்டி அவருக்கு சிறப்புமிக்க தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.