20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி பெண்மணி கைது: கொந்தளிக்கும் மக்கள்
இந்திய வம்சாவளியினரான சீக்கியப் பெண்மணி ஒருவர் அமெரிக்க புலம்பெயர்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட விடயம் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய வம்சாவளி பெண்மணி கைது
ஹர்ஜீத் கௌர் (73) என்னும் சீக்கியப் பெண்மணி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஹெர்குலிஸ் என்னுமிடத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்துவருகிறார்.
1992ஆம் ஆண்டு அமெரிக்கா வந்த கௌர், தன்னந்தனியாக இரண்டு மகன்களை வளர்த்தவர் ஆவார். 20 ஆண்டுகளாக கடை ஒன்றில் தையல் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, அதாவது, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, கௌர் அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சமுதாயத்தினரிடையே மரியாதைக்குரியவரும், அனைவருடனும் அன்புடன் பழகுபவரும், கடின உழைப்பாளியுமான கௌர் கைது செய்யப்பட்ட விடயம் ஹெர்குலிஸ் நகரில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
கௌர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை சுமார் 200 பேர் El Sobrante என்னுமிடத்தில் பேரணி நடத்தினார்கள்.
Over 70% of people arrested by ICE have no criminal conviction. Now, they are literally going after peaceful grandmothers. This shameful act is harming our communities. I demand the release of Harjit Kaur. https://t.co/jGS9FiJbJI
— State Senator Jesse Arreguín (@JesseArreguin) September 13, 2025
அவர்களுக்கு ஆதரவாக சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள மாகாண செனேட்டரான Jesse Arreguin, அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 70 சதவிகிதம் பேருக்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப்போது அமைதியான பாட்டிமார்களையும் கைது செய்யத் துவங்கியுள்ளார்கள் அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள்.
அவர்களுடைய வெட்கத்துக்குரிய இந்த செயல் நமது சமுதாயத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஹர்ஜீத் கௌரை விடுவிக்கவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார் Jesse Arreguin.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |