$15 பில்லியன் இழப்பீடு வேண்டும்! நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீது டிரம்ப் வழக்குப்பதிவு
அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் மீது வழக்குப்பதிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் மீது பொய் மற்றும் அவதூறு வழக்கில் $15 பில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை இரவு டிரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவின் மிகவும் மோசமான மற்றும் சீரழிந்த பத்திரிகையில் ஒன்று என விமர்சித்துள்ளார்.
மேலும் இந்த பத்திரிகை பொய்களை சொல்லி, அவதூறு செய்து மற்றும் தன்னை இழிவு படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நியூயார்க் டைம்ஸ் கமலா ஹாரிஸுக்கு சாதகமான இருந்ததை சுட்டிக்காட்டி, ஜனநாயக கட்சியின் சார்புடையதாக பத்திரிகையாக இது இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
புளோரிடாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கானது, சமீபத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடனான டிரம்பின் தொடர்பு குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என டிரம்ப் அச்சுறுத்திய சில நாட்களுக்கு பிறகு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |