காசாவில் இஸ்ரேலின் செயல் இனப்படுகொலையாக இருக்கலாம்! ஐ.நா ஆணையம் அறிக்கை
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை என்று கருதப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேல்
ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திர அமைப்பானது வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில், இஸ்ரேல் இனப் படுகொலையை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.
ஹமாஸின் அக்டோபர் 7, 2023ம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை இந்த ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழிக்கும் திட்டத்துடன் இஸ்ரேலின் செயல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை மாநாட்டின் வரையறைக்கு ஏற்றவாறு இருப்பதாகவும், வரையறையின் பட்டியலில் உள்ள 5 அளவீடுகளில் 4 அளவீடுகளை இஸ்ரேல் காசாவில் செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதல் முறையாகும்.
இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டு பக்கச்சார்பானது என்று விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |