ரூ.5000 முதலீட்டில் தொடங்கிய முயற்சி: ரூ.17,000 கோடி சாம்ராஜ்ஜியம்! யார் இந்த ராமச்சந்திரன்?
பல தொழிலதிபர்கள் மிகப்பெரிய முதலீடுகளை நம்பி அல்லது புதிய தொழில்நுட்பத்தை நம்பி தங்கள் வணிக சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புவார்கள். ஆனால் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை நம்பி ஒரு மிகப்பெரிய வணிக திரும்பி பார்க்க வைத்தவர் ராமச்சந்திரன்.
யார் இந்த ராமச்சந்திரன்?
கேரளாவின் திருச்சூரில் தொடங்கிய ராமச்சந்திரன் கதை ஒரு கணக்காளராக தொடங்கியது.
முதுகலை பட்டம் பெற்ற ராமச்சந்திரனுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
இதையடுத்து தனது இலக்காக புதிய சலவை வெண்மைப்படுத்தும் பொருளை கண்டுபிடிக்க திட்டமிட்டு முயற்சியை தொடங்கியுள்ளார்.
இதற்காக தனது சமையலறையில் உள்ள பல பொருட்களை பயன்படுத்தி புதிய சலவை பொருளுக்கான சூத்திரத்தை கண்டுபிடிக்க முயற்சித்தார்.
ஆனால் இதில் எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
கை கொடுத்த பத்திரிகை
இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது.
அதில் நீல நிற சலவை பொருளை உருவாக்கும் வழிமுறை விவரிக்கப்பட்டு இருந்தது.
அதை ஆதாரமாக கொண்டு மீண்டும் தன் முயற்சியை தொடங்கிய ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு பிறகு இறுதியாக வெற்றி பெற்றார்.
புதிய பிராண்டின் பிறப்பு
தனது புதிய சூத்திரத்தின் வெற்றிக்கு பிறகு 1983ம் ஆண்டு ரூ.5000 கடனாக பெற்று தனது மகளுடைய பெயரில் ஜோதி ஆய்வகம்(Jyoti Labs) என்ற சிறிய ஆய்வகத்தை அமைத்தார்.
இந்த ஆய்வகத்தில் பல பொருட்களை உற்பத்தி செய்தாலும், உஜாலா சுப்ரீம் என்ற திரவ துணி வெண்மைப்படுத்தும் பொருள்(Ujala Supreme Liquid Fabric Whitener) அவருக்கு உண்மையான வெற்றியை தேடித் தந்தது.
இந்த உஜாலா சுப்ரீம் விரைவாக தென்னிந்தியாவில் பிரபலமடைந்த நிலையில், 1997 முதல் வட இந்தியாவிலும் பிரபலமடைய தொடங்கியது.
உஜாலா வெற்றி
உஜாலாவின் வெற்றி ஜோதி ஆய்வகத்தை ரூ.17,000 கோடி சந்தை மூலதனம் கொண்ட பெரிய நிறுவனமாக உயர்த்தியது.
இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது பிரபலமான பல வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |